இந்த அழகிய சித்திரம் கவிதையாய் மலர!
கனலின் சூட்டில் மெல்லப் பொன்னாய் மாறி,
கருகிய கோடுகள் சுவையின் சான்றாய்!
தீயின் நாக்குகள் மெல்ல வருட,
புகையின் நறுமணம் காற்றில் தவழ…
மழை மேகம் இன்றி, மனம் ஆட்டம் போட,
சுவையான சோளத்தின் வாசம் வீச!
நெருப்பின் அணைப்பில் பொலிவு பெற்ற,
இந்த அழகிய சித்திரம் கவிதையாய் மலர!
இ.டி.ஹேமமாலினி.
சமூக ஆர்வலர்
படம் பார்த்து கவி: கவிதையாய் மலர!
previous post
