காகிதத்தில் கனவுகளை நினைவாக்கும் தோழிகள்,
மழலைகளின் கையில் மலரும் வண்ண பூக்கள்.
சிவப்பு வண்ணம் உதயமாய் ஒளிர்கிறது,
நீல வண்ணம் மனதை மயக்குகிறது.
பச்சை வண்ணம் உயிரோடு பேசுகின்றன,
மஞ்சள் ஒளி பொன்னாக மின்னுகிறது.
கருப்பு வண்ணம் வடிவம் தருகிறது,
ஊதா வண்ணம் புன்னகை சேர்க்கிறது.
வண்ணம் கலந்தால் உலகம் அழகு,
வண்ண பென்சில்கள் வாழ்வின் நம்பிக்கை.
உஷா முத்துராமன்
படம் பார்த்து கவி: வண்ண பென்சில்கள்
previous post
