பயண ஆவணத்தின் உறுதி
கிடைத்ததால் வானில் பறக்கிறேன்
கனவுகள் நினைவானதில் எல்லை இல்லா மகிழ்ச்சி
புதிய உலகம் பார்ப்பதற்காக தாய் நாட்டை விட்டு பறந்தேனே,
என் சிந்தனையின் பார்வையில் எதிர்பார்ப்புகள் உள்ளதே
எல்லை கடந்த சுதந்திரம் கிடைத்ததால் , பறவையாய் நான் பறக்க மனம் மகிழ்ச்சியில் திளைத்தது.
அறிமுகம் கிடைத்த புதிய நாட்டில் புதிய உலகமும் அன்பின் மொழி கற்க முனைந்தேன்
காற்றைத் தாண்டிச் செல்கிறேன்,
புதிய முகங்கள் சிரித்து, நண்பனாய் வரவேற்பர் என்ற நம்பிக்கையுடன் வானில் பறந்தேன்
பாஸ்போர்டு எனக்கு கிடைத்த பாலம், பண்பாட்டை இணைக்கும்,
சிறகு போல அது எனக்கு, வெற்றியின் பாதை காட்டும்.
உஷா முத்துராமன்
படம் பார்த்து கவி: பயண ஆவணம் கிடைத்ததே
previous post
