©WriterCharithraas
Hello Mr விநாயக்.!
கடவுள்களில், விநாயகர் அநியாயத்துக்கு Simple.
Mr.Cool.
இந்த “தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்” லாஜிக்கெல்லாம் தலைவருக்கு மட்டுமே ஏக பொருத்தம். வெறும் சாணியை பிடித்து வைத்தால் அதுவும் பிள்ளையார். Artificial Intelligence-ல் இலைதழை, நட்டு போல்ட்டு, யானை, என்று க்ராஃபிக்கலாய் வடிவமைத்தால் அதுவும் பிள்ளையார்.
“என்கிட்டே ரெண்டு பொண்டாட்டி இருக்கு தெரியும்ல..?” என்று தம்பி முருகன் வம்புக்கிழுத்தால்,
“ஃபிகர விட பீஸ் முக்கியம் தம்பி..!”என்று கொழுக்கட்டை/சுண்டலில் லயித்து, முரட்டு சிங்கிள்களுக்கெல்லாம் ஆதரவு கொடுத்தவர்.
இருந்தாலும் “ஃபிகரும் முக்கியம்ண்ணே..!” என்று ஓவராய் பேசினால் பாஷா ரஜினி ஸ்டைலில்,
“எம் பேரு, நாயக். விநாயக்…! எனக்கு இன்னோரு பேரு இருக்கு..!”
ட்டுடும் டுண்ட்டுடும்.. என்று பேக்ரவுண்டு மியூஸிக் தொடங்கிட,
“சித்தி-முத்தி விநாயக்..!” என்று தன்னிடமும் ஆள் இருப்பதை கெத்தாக சொல்வார்.
“ஹிஹிஹி..!”சும்மா கலாச்சேண்ணே..நீ யாரு..! என் லவ்வுக்கே நீதானே ஹெல்ப் பண்ண..? எத்தினி வேஷம் போட்ருக்க..Man of Disguiseண்ணே நீ..!” என்று முருகன் சரணடைந்தால்,
“அத்த்த்த்து..!” என்று தல அஜித் ஸ்டைலில் நகர்வார்.
Style Chap.
“வேலை கிடைச்சதும் உனக்கு ஆயிரத்தெட்டு தேங்கா ஒடைக்கிறேன்..”என்று ஜம்பமாய் சொல்லிவிட்டு செய்யாது போனாலும், தலைவர் சாபம் கொடுப்பதில்லை.
“அட போடா..இத்தன தேங்கா எனக்கெதுக்கு..?” என்பது போலவே இருப்பார்.
Silent Chap.
ஆண்டியும் இல்லை. அரசனும் இல்லை. எங்கேயாவது ஓரமாய் அரசமரமிருந்தால் போதும். அநாயசமாக ஒரு சிட்டிங்கை போட்டுவிடுவார்.
Lazy Chap.
ஞானப்பழப் பிரச்சனை வருகையில் முருகன் மயிலேறி கிளம்பிட, தன் பின்னால் ஒளிந்து கொண்ட சுண்டெலியை பாவமாய் பார்த்துவிட்டு,
“Dad. I Think you & Mom are my World. எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணின்டு ஊர் சுத்தணும்//? உங்களையே சுத்திடறேன். நேக்கு கொடுங்கோ..!”என்று பழத்தை அடித்தவர். தன்னிடம் எது இருக்கிறதோ அதை வைத்தே ஜெயிக்கும்,
Resource management Chap.
“மஹாபாரதத்தை எழுதனுமே..என்று வ்யாஸர் கலங்கி நிற்க, My Friend, கமான்.. நாங்க இருக்கோம்..:”என்று வாசன் Eye care டாக்டர் கணக்காய் தன் தும்பிக்கை உடைத்து வ்யாஸருக்கு நம்பிக்கை கொடுத்தவர்.
A Kind hearted Chap.
இன்னும் என்னென்னவோ இருக்கிறது.
ஆனால் இதெல்லாம் எப்படி இவருக்கு சாத்தியம்..?
“மூஞ்சி சார்..மூஞ்சி..அவரு மூஞ்சி அப்படி..!”
உண்மைதான்.
அப்பாவியான யானை முகமாய் இருப்பதால், He Exists Great.
இதுவே மனித முகமெனில், நம்மூர் ஜாதிமத/அரசியல்/மீடியா வியாபாரிகளிடம் சிக்கி சீரழிந்திருப்பார்.
மனித மு(அ)கம், அவ்வளவு கேவலமானது.!
1 comment
👏👏