ஒவ்வொரு குழந்தைக்கும் தேவையான தூக்கத்தின் அளவு வேறுபடும். எனினும், ஒரு நிலையான தூக்க நேரத்தை நிர்ணயிப்பது குழந்தைகள் தூக்கத்தை எளிதில் அடைய உதவும்.
குழந்தையின் வயது மற்றும் தூக்க தேவையை கருத்தில் கொண்டு, ஒரு பொருத்தமான தூக்க நேரத்தை தேர்ந்தெடுக்கவும்.
* படுக்கையறை இருட்டாகவும், அமைதியாகவும், குளிர்ச்சியாகவும் இருக்க வேண்டும்.
* படுக்க போகும் முன் அதிக ஒளி அல்லது சத்தம் இருக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
* நித்திரைக்கு முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் அல்லது தயிர் கொடுப்பது தூக்கத்தை ஊக்குவிக்க உதவும்.
* படுக்கைக்கு முன் அதிக சர்க்கரை அல்லது காஃபின் உணவுகளை தவிர்ப்பது நல்லது.
* உறங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் தொலைக்காட்சி, கணினி மற்றும் ஸ்மார்ட்போன் போன்ற திரைகளை பார்ப்பதை தவிர்க்கவும்.
* சில குழந்தைகளுக்கு பொம்மை அல்லது போர்வை சீக்கிரம் துயிலை கொண்டு வரும்.
* தூங்க தாமதமாகும் குழந்தையை திட்டாமல் அல்லது கட்டாயப்படுத்தாமல், அமைதியாக தூங்க வைக்க பெற்றோர்கள் முயற்சிக்க வேண்டும்.
* குழந்தைக்கு தூக்கமின்மை பிரச்சனை தொடர்ந்து இருந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.
குழந்தைகள் சீக்கிரம் தூங்க டிப்ஸ்
previous post