எழுத்தாளர்: தஸ்லிம்
அப்பா.. அப்பா.. எங்க இருக்கீங்க?.. என்று கேட்டுக் கொண்டே உற்சாகமாக வீட்டினுள் நுழைந்தாள் அமுதா..
வீட்டின் பின்புறத்தில் நின்று புகை பிடித்துக் கொண்டிருந்த மருது வேகமாக சிகரட்டை கீழே போட போனவர் அதில் இன்னும் கொஞ்சம் மிச்சம் இருப்பதை பார்த்து விட்டு கீழே போட மனமில்லாமல் ஒரே இழுப்பாக இழுத்து விட்டு கீழே தூக்கி போட்டு விட்டு உள்ளே ஓடி வந்தவர், “என்னம்மா அமுதா.. வரும் போதே சந்தோஷமா அப்பாவை கூப்பிட்டுக்கிட்டே வர்ற? என்ன விஷயம்? என்று கேக்க..
அவர் மேல் இருந்து வந்த புகையின் நெடி அவளுக்கு இருமல் தர.. இடுப்பில் கைகளையும் ஊன்றி நின்றபடி அவரை முறைத்தாள்..
மருது, “என்னம்மா எதுக்கு அவசரமா கூப்பிட்டுட்டு இப்படி முறைச்சுக்கிட்டு இருக்க”…
அமுதா, “போப்பா நான் எவ்வளவு சந்தோஷமா இன்னைக்கு வச்ச டெஸ்ட்ல ஃபர்ஸ்ட் மார்க் வாங்கி இருக்கேன்னு சொல்ல வந்தேன்.. நீ என்னடான்னா சிகரெட்டை பிடிச்சுட்டு வந்து நிக்கிற.. இதை விட்டுடுவேண்ணு சொன்னில”..
“கண்டிப்பா விட்டுடுவேண்டா.. இந்த எக்சாம்ல ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குவியாம் அதோட நான் விட்டுடுவேனாம்”..
“ம்கும் நீ இப்படி தான் எப்போ பார்த்தாலும் சொல்லுற.. நானும் நீ சொல்ற மாதிரி செய்ய தான் செய்றேன்.. ஆனா நீ விடவே மாட்டேங்குற”..
“இது தான் லாஸ்ட் இனி குடிக்க மாட்டேன் ப்ராமிஸ்..”
நம்புறேன்.. வேற வழி..
ஒரு நாள் அமுதா படிக்கும் பள்ளியில் இருந்து மருதுக்கு அழைப்பு வந்தது.. அதில் அமுதாவிற்கு உடம்பு முடியவில்லை என்றும் உடனே வந்து அழைத்து செல்லுமாறும் கூற பதறியடித்து பள்ளிக்கு ஓடி வந்தார் ஒற்றை பெற்றோரான மருது..
“என்ன மிஸ் என்னாச்சு அமுதாவுக்கு?”..
“திடீர்னு ஹை ஃபீவர் சார்.. வீசிங்கா வேற இருக்கு.. இருமல் மூச்சு விட கூட முடியாம தொடர்ந்து வருது.. அதோட எக்சாம் எழுத போறேன்னு அமுதா அடம் பிடுச்சுக்குட்டு நிக்கிரா.. நீங்க ஏதோ ப்ராமிஸ் பண்ணிங்களாமே.. அதுனால எழுதியே தீருவாளாம்”..
“இப்போ அமுதா எங்க மிஸ்?” என்று மருது படபடப்புடன் கேக்க..
“இதோ வந்துட்டா பாருங்க”..
வரும்போதே கடுமையான இருமல் சத்தத்துடனே கண்கள் எல்லாம் சிவப்பாகி வந்தாள் அமுதா..
பக்கத்தில் வந்ததும், “என்னடாமா ஆச்சு?” என்றபடி மருது நெற்றியை தொட்டு பார்க்க அது நெருப்பாக கொதித்தது..
“அய்யோ என்ன இப்படி சுடுது.. மிஸ் நான் அமுதாவை கூட்டிட்டு போறேன்” என்க..
அமுதாவோ பேச முடியாமல் இருமலுடன், “எக்சாம் எழுதிட்டு வர்றேன் பா.. நீ இல்லைனா ப்ராமிஸ் பண்ணபடி நடக்க மாட்ட”..
“அதெல்லாம் கேப்பேன்.. நீ இப்போ வா ஹாஸ்பிடல் போகலாம்” என்று அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்..
அங்கு சில பல சோதனைகள் செய்யப்பட்டு அங்கேயே தங்க சொன்னார்கள்.. இரண்டு நாட்கள் தங்கி சிகிச்சை எடுத்தும் கூட இருமல் இம்மி அளவும் குறையவில்லை.. மருத்துவர்களுக்கு வேறொரு சந்தேகம் வர இன்னும் பல சோதனைகள் அமுதாவிற்கு மீண்டும் எடுக்கப்பட்டது..
அதன் முடிவு கைக்கு வந்ததும் அதிர்ந்த மருத்துவர்கள் மருதுவை பேசுவதற்காக அழைத்தார்கள்.. இந்த ரெண்டு நாட்களிலேயே மருது தன் மகளுக்கு இப்படி ஆனதை நினைத்து நொந்து போயிருந்தான்.. உணவு, உறக்கம், வேலை அனைத்தையும் மறந்து சிகரட்டையும் கூட (நிறுத்தி) மறந்து அமுதாவை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டிருந்தான்..
இப்போது மருத்துவருக்கு எதிர் இருக்கையில் பதட்டத்துடன் அமர்ந்திருந்தான் மருது..
டாக்டர், “அமுதாக்கு டெஸ்ட் பண்ண ரிசல்ட் வந்துடுச்சு” என்று வருத்தமான குரலில் சொன்னார்..
மருது, “எதுவும் இல்லைல்ல டாக்டர்.. என் பொண்ணுக்கு ஒன்னும் இல்லைல டாக்டர்” என்று பதட்டப்பட..
டாக்டர், “உங்க வீட்ல யாரும் ஸ்மோகர்ஸ் (smokers) இருக்கீங்களா”
மருது அதில் மிரண்டு விழித்து பின் தயங்கி, “ஆ.. ஆமா டாக்டர்”
டாக்டர், “வெரி சாரி டூ சே திஸ்.. உங்க டாட்டெருக்கு லங் கேன்சர் ( நுரையீரல் புற்றுநோய்) வந்துருக்கு..
அதில் அதிர்ந்து இருக்கையில் இருந்து எழுந்த மருது, “என்ன சொல்றீங்க டாக்டர்.. என் மகளுக்கா.. அந்த சின்ன பிள்ளைக்கா.. அதெல்லாம் இருக்காது.. நீங்க சரியா நேம் செக் பண்ணிட்டு சொல்லுங்க” என்று கத்த..
டாக்டர், “உட்காருங்க சார்.. அமைதி ஆகுங்க.. இது நம்புறதுக்கு ரொம்ப கஷ்டமா தான் இருக்கும்.. ஆனா அது தான் உண்மை”
அவர் சொன்னதும் அமர்ந்த மருது, “எதுனால சார் இது இந்த சின்ன பொண்ணுக்கு போய் இப்படி ஒரு நோய் வந்துச்சு” என்று கண்கள் கலங்க கேக்க..
டாக்டர், “எந்த காரணம் வேணும்னாலும் இருக்கலாம்.. ஆனா முக்கிய காரணம் ஸ்மோக் பண்ற இடத்துலே அதிகமா அவங்க இருந்ததா கூட இருக்கலாம்”
அதில் அதிர்ந்து கூனி குறுகி தன்னால் தான் இப்படி ஒரு நோய் தன் மகளை தாக்கி இருக்கிறது என்று உணர்ந்த மருது, “காப்பாதிடலாம்ல சார்.. உயிருக்குலாம் எந்த பிரச்சனையும் இல்லையே” என்று பயந்து கேட்க..
டாக்டர், “பை காட்ஸ் கிரேஸ் நம்ம ஏர்லி ஸ்டேஜ்லயே பார்த்துட்டோம்.. கண்டிப்பா குணப்படுத்திடலாம்.. ஃபர்ஸ்ட் சின்னதா ஒரு சர்ஜரி பண்ணனும்.. அதிலேயே கேன்சர் ரிமூவ் ஆகிடும் அப்புறம் ரேடியேஷன் பண்ணனும் தேவைப்பட்டால் கீமோதெரபி பண்ணி திருப்பி கேன்சர் வரவிடாமல் தடுக்கணும்.. சரி பண்ணிடலாம்.. டோண்ட் வொர்ரி” என்றதும் தான் அவனுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது..
மருது, “இது எல்லாம் பண்ணா ரொம்ப வலிக்குமா சார்” என்று வேதனையுடன் கேக்க..
டாக்டர், “ரொம்ப வலிக்கும்னு சொல்ல முடியாது.. ஆனால் வலி இருக்காதுன்னு சொல்ல முடியாது.. கிமோதெரபிள கொஞ்சம் பெயின் ஃபுல் சைட் எபக்ட்ஸ் இருக்கத்தான் செய்யும்.. நமக்கு கேன்சர் போகணும்னா சில வலிகளை தாங்கி தான் ஆகணும்.. வேற வழி இல்ல”..
மருது, “எவ்வளவு நாள் சார் ஆகும்.. என் பொண்ணு இப்பதான் டென்த் படிச்சுக்கிட்டு இருக்கா.. ரொம்ப நல்லா படிக்கிற பொண்ணு.. எக்ஸாம் நேரத்துல இப்படி வந்து இருக்கு”..
டாக்டர், “அது சொல்ல முடியாது ட்ரீட்மென்ட் பொறுத்து 3 டு 4 மந்த்ஸ் ஆகலாம்”..
மருது, “அய்யோ அப்போ படிப்பு”..
டாக்டர், “அவங்களுக்கு வில்பவர் இருந்ததுனா இங்கேயே இருந்து கூட படிச்சு எக்ஸாம் அப்போ போயி எழுதிக்கலாம்.. ஆனா எல்லா ட்ரீட்மென்ட் அவங்க பக்கத்துல இருக்குறது தான் நல்லது எங்க அப்சர்வேஷனிலேயே இருக்கணும்”..
மருது, “சரிங்க டாக்டர்.. பணம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.. என் பொண்ண நல்லபடியா காப்பாற்றி கொடுத்துடுங்க” என்று கும்பிட்டபடி விம்மலுடன் கூற..
டாக்டர், “அதெல்லாம் காப்பாத்திடலாம்.. கவலைப்படாம போய் உங்க பொண்ணுக்கு நல்ல பாசிட்டிவா பேசி ஆறுதலா இருங்க.. நெகட்டிவ் தாட்ஸ் வராம பார்த்துக்கோங்க.. அவங்க எவ்வளவுக்கு எவ்வளவு பாசிட்டிவா இருக்காங்களோ அவளைக் அவ்வளவு சீக்கிரமாக குணமாக வாய்ப்பிருக்கு”..
மருது, “சரிங்க டாக்டர்” என்று விட்டு தன் மகளிடம் சென்றான்..
அமுதா, “என்னப்பா என்ன சொன்னாங்க டாக்டர்? நம்ம இன்னைக்கு வீட்டுக்கு போயிடலாமா? எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல? எனக்கு ஸ்கூலுக்கு போகணும் பா”..
மருது, “போகலாமா.. நம்ம இன்னும் கொஞ்ச நாள் இங்கே தங்கி இருந்து ட்ரீட்மெண்ட் பார்த்துட்டு தான் போக வேண்டி வரும்”..
அமுதா, “ஐயோ அதெல்லாம் என்னால முடியவே முடியாது.. இப்பவே என்னால முடியல.. ப்ளீஸ் என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போப்பா.. எனக்கு எக்ஸாம் இருக்கு”..
மருது, “போகலாம்மா.. உனக்கு சின்னதா லங்ஸ்ல இன்பெக்சன் ஆயிருக்காம்.. அதனால தான் இப்படி இருமல் வருதாம்.. அத நாம இங்கேயே இருந்துதான் க்யூர் பண்ணனுமாம்.. இப்ப நீ ஸ்கூலுக்கு போனீன்னா நீ இருமுனினா அது மத்தவங்களுக்கும் பரவ வாய்ப்பு இருக்காம்.. அப்படி ஆகணும்ன்னு உனக்கு ஆசையா சொல்லு.. நம்மனால மத்தவங்களுக்கு எந்த தீங்கும் ஏற்படக்கூடாது தானே” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே டாக்டர் சொன்ன, “உங்க வீட்ல யாரும் ஸ்மோக் பண்ணுவீங்களா” என்ற வார்த்தை காதுக்குள் ரீங்காரமாக கேட்டது..
அமுதா, “ஐயோ அப்படின்னா நான் போகலப்பா.. ஆனா எக்ஸாம் எழுதணுமே” என்ற அவள் சொல்ல..
மருது, “நான் போய் ஸ்கூல்ல பேசுறேன்டா.. உன்ன எக்ஸாம் எழுத மட்டும் கூட்டிட்டு வரேன்னு சொல்லி பார்க்கிறேன்.. நீ இங்கே இருந்து படி உன்னால முடியும் தானே.. புரிஞ்சுக்கோடா” என்று கெஞ்சுவது போல் கேட்க..
அமுதா, “சரிப்பா அதுக்கு ஏன் கெஞ்சுற.. நானே நீ ப்ராமிஸ் பண்ணி இருக்கியே.. இந்த தடவை எக்ஸாம் எழுத முடியாமல் போயிடுமானு பயந்துட்டு தான் எக்ஸாம் இருக்குன்னு சொன்னேன்.. இப்பதான் எனக்கு எழுத வாய்ப்பு இருக்குது இல்ல அப்ப நான் கண்டிப்பா ஃபர்ஸ்ட் மார்க் வாங்கிடுவேன். நீயும் ஸ்மோக் பண்றது விட்ருவ ஹைய்யா ஜாலி” என்று அவள் சிரித்தபடி கூட.. மருது மனதுக்குள் நொந்து போனான்..
அடுத்தடுத்த நாட்கள் அவன் பள்ளியிலும் சென்ற அனுமதி வாங்கி விட்டு வந்தான்.. அவனே வியாபாரம் செய்வதால் அவனுக்கு நேரம் கிடைக்கும்போது மருத்துவமனையில் இருந்தே கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டான்.. அதனால் பணத்திற்கும் எந்த பங்கமும் இல்லாமல் சிகிச்சை தொடங்கியது..
இங்கேயும் சிகிச்சை தொடங்க ஒவ்வொரு சிகிச்சை முடிவுகளிளும் அவள் படும் பாட்டை பார்த்து அவள் துடித்ததை விட இவன் அதிகம் துடித்து போனான்.. அதில் இனிமேல் சிகரெட் பிடிக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.. அவன் மனதுக்குள் பெரும் மாற்றமே உண்டானது..
ஒருமுறை சிகிச்சை முடிந்து வந்ததும் அமுதா, “ஏன் அப்பா இப்ப எல்லாம் உன்கிட்ட சிகரெட் வாசனை வர்றது இல்ல.. நீ குடிக்கிறது இல்லையா?” என்று கண்கள் பிரகாசிக்க அவனிடம் தன் சந்தேகத்தை கேட்க..
மருது, “இல்லடா நான் எப்பயோ விட்டுட்டேன்” என்று சொல்லவும்..
அமுதா, “நிஜமாவாப்பா” என்று அவள் ஆவலுடன் தன் வலியையும் பொருட்படுத்தாது கேட்கவும்..
மருது, “ஆமாடா ஃபர்ஸ்ட் மார்க் வாங்கலைன்னா கூட அப்பா இனிமே கண்டிப்பா சிகரெட் குடிக்க மாட்டேன்.. இனிமே சிகரெட் குடிக்கிறவங்களுக்கும் நான் எச்சரிக்கை செய்வேன்” என்று சொல்ல..
அமுதா, “ரொம்ப தேங்க்ஸ் பா” என்று அவன் கண்ணத்தில் ஒரு முத்தம் வைத்துவிட்டு போய் அவள் கட்டிலில் படுத்துக்கொண்டாள்..
அமுதாவும் அவள் தந்தை சுவாசத்திற்கு கேடு விளைவிக்கும் புகையை விட்டதை நினைத்து ஆசுவாசம் ஆனாள்.
பரீட்சையும் நன்றாக எழுதி முடிவும் வந்து சேர்ந்தது.. அமுதா தான் அந்த பள்ளியில் முதலிடத்தை பிடித்திருந்தாள்.. அது இன்னமும் அவர்களுக்கு சந்தோஷம் தர மருத்துவமனையே அவளை கொண்டாடியது..
நான்கு மாதங்கள் சிகிச்சை என்று சொன்னது ஐந்து மாதங்கள் ஆகி ஒரு வழியாக அமுதா குணமாகி வீட்டுக்கு வந்ததும் அவன் செய்த முதல் வேலையே சில நோட்டீசுகளை அடித்தது தான்..
அதில்,
“புகை பிடிக்காதீர்கள்..
உங்களையும் கொன்று கொண்டு உடன் இருப்பவர்களை கொள்ளாதீர்கள்.. கத்தி எடுத்து குத்தினால் மட்டும் கொலையாகாது.. நீங்கள் புகை பிடிப்பது ஒருவரின் உயிரை ஆபத்தில் கொண்டு போய் விடுமேயானால் அதுவும் கொலையில் தான் சேர்க்கப்படும்” என்று எழுதி அங்கங்கு சென்று சுவற்றில் ஒட்டி வந்தான்.. பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் பகிர்ந்தான்..
ஏதோ அவன் அவனுக்கு நிகழ்ந்த மாற்றம் அனைவருக்கும் நிகழ வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அத்தனையும் செய்து முடித்தான்..
மருது மனம் மாறி மனமாற்றம் கொண்டு புகை பிடிப்பதை நிறுத்திவிட்டு தங்களை சுற்றி இருக்கும் நலம் விரும்பிகளின் உயிர்களைக் குடிக்காமல் தடுத்துவிட்டான்.. நீங்கள் எப்பொழுது நிறுத்தப் போகிறீர்கள்.. உங்களுக்குள் எப்பொழுது மாற்றம் உண்டாக போகிறது..
முற்றும்.
அறிவிப்பு: சித்திரை திருவிழா சிறுகதை போட்டி! போட்டியில் கலந்து பணத்தை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: