தோல்வி நிலை என மனம்
துவலும் போதெல்லாம்!
உணர்வுகளில் உருவான கனவுகள்
கலைந்து போகும் போதெல்லாம்!
அக்னி பிரவேசம் செய்த அரிமாய்
உடலும் மனமும் ஒன்றாய் இணையும்!
வீறு கொண்டு எழும்
வெற்றி நடை இடும்
அகத்தில் தீயாய் எறியும்
கனவு மெய் படும் போது
புறத்தீப்பட்ட காயம் எல்லாம்
தீத்திப்பாய் மாறும்
சர். கணேஷ்
படம் பார்த்து கவி: கனவு மெய் படும் போது
previous post