மூதாதையர்கள் சொத்தை போல
முத்தான என்னையும் ஏற்றுக் கொண்டிருந்தால்
அக்னி பகவானின் சாபத்திற்கு
இந்த மனிதர்கள் ஆளாகி இருக்க மாட்டார்களோ என்னவோ?
இன்னமும் கெட்டு விட வில்லை
இடி மின்னலில் இருந்து நான் தப்பித்து விடுவேன்
உங்கள் நெஞ்சத்தில் இன்னமும் காயாத ஈரமிருந்தால்
கொஞ்சம் தண்ணீர் விடுங்கள்
உங்கள் அடுத்த தலைமுறைகளாவது வெக்கை இல்லாமல்
றெக்கை விரித்து
அந்த பறவை போல வாழும்!
இப்படிக்கு
மரங்கள்
-லி.நௌஷாத் கான்-
படம் பார்த்து கவி: மூதாதையர்கள்
previous post