கண்ணெதிரே காணும் காட்சியின்
விளைவு தானோ இந்த விழிப்பார்வை !
பெற்ற வயிற்றில்
பய உருண்டை உருள..
தகப்பனின் நெஞ்சில் விழும் சம்மட்டி அடியின் வலியிலும்
உன் கை கொண்டு மூடிய வாய்தனை மூச்சுக்காற்றின் முனகல் கூட வெளிசெல்லாதபடி தன் கை கொண்டு
வாய் மூடிய கோரம்…
வழி சொல்லுமா இவ்வுலகம்!
பெற்றவனோ.. உன் பெயரின் நலம் விரும்பியோ…
மூடிய கைகளை
இறுகப் பற்றி அழைத்துச் செல் !
அழகுப் பார்வையை
பந்தாடியவனை
துண்டாட..உன்
தைரியத்தை
துணை கொள்!
உன் மெல்லிய கரங்கள் வாய் மூடுவதற்கல்ல..
மகனே!
வாள் கொண்டு
வைரிகளை வேரறுக்க..!
நீ எழுதும் எழுத்துக்கள் பேசும்
உன் குணம் பற்றி!
நீ பிடிக்கும் வாள் சொல்லும்
உன் கரங்களின்
வலிமை பற்றி!
துணிந்து செல்..
துணைக்கு
துணிவு வரும்
உன்னோடு…
✍🏼 தீபா புருஷோத்தமன்