ஞாபகம் வருதே…….
விரலிடை விழுந்த
வெண்ணிலவுக்கு
சிறகு முளைத்தது
வானம்பாடியாய்…..
கைகள் கோர்த்து
விண்ணில் பறந்து
துள்ளித் திரிந்த நாட்கள்
பள்ளிப் படித்த நாட்கள்
துயரங்களை தூளாக்கி
தூரமாக துரத்தி
மனம் மீட்டும் இசை
மணம் சேர்க்கும் இசை
இதமான இசையில்
கைகள் கோர்த்து
வீணை மீட்ட வா ……
மாலை சூட்ட வா……
எனக் கேட்ட காலங்கள்
தந்த கோலங்கள்….
கண்ட கனவுகளாய்
களிப்பான நாட்கள்
ஞாபகம் வருதே…….
ஞாபகம் வருதே…….
பத்மாவதி