பாதணி
பாதம் காக்கும்
பாதணியே …..
காடு மேடுகளையும்
கரடு முரடான
பாதையையும் நீயின்றி
கடப்பது எப்படி 🤔
பிறர் உயர
துரும்பாய் தேயும்
செருப்பே…..
உன் அருமை உணர்ந்தே
பாதம் காக்கும் உன்னை….
வண்ண மலர்கள்
பூத்து குலுங்கும்
பூந் தொட்டியாக
மலர்களை காத்து
வாசலுக்கு அழகு
சேர்க்க அழைக்கிறார்களோ🤔
பத்மாவதி