உயிர் தியாகம்
இரு அறை கொண்ட
இதயத்தில்…
ஒரு அறையில் நாடும்
மறு அறையில் வீடும்
சுமந்து….
எல்லையில் நின்று
இரவில் இமை மூட
நீ செய்த உயிர் தியாகம் …
ஈடில்லை என்பதை
தாய் மண் அறியும்…
ஆதலால்
உன் பாதங்களை சுமந்த பாதணியில் கூட
தாய் மண் வாசனையுண்டு என்பதை பூக்கள் அறியும்…
உன் தியாகத்திற்கு நன்றி செலுத்த உன் பாதணிக்கு அழகு சேர்க்கிறதோ….
— இரா. மகேந்திரன் —