காற்றும் கடலும் அன்பு கொண்டதால்
அலையானது …
நீயும் நானும் அன்பு கொண்டதால்
காதலானது….
கடலின் ஆழம் காற்றறியும் …
என் அன்பின் ஆழம்
நீ அறிவாய்…
காற்றின்றி அலையில்லை ..
நீயின்றி நான்னில்லை..
நம் இருவர் கா(த)ல்
சுவடுகள் கண்டால்
கடல் அலைகளும் முத்தமிட்டு திருடிச் செல்லும்….
நம் காதல் நினைவுகளை
கடல் சொல்லும்…
கடலின் காதலை
பூமி எதிர்த்தால் ஆழி பேராலையாக தன் காதலின் வலிமையை உலகறிய செய்யும்….
நம்மை எதிர்த்தால் நம் சினம் கொண்டு
காதலின் வலிமையை
ஊரறறிய செய்வோம்…
— இரா. மகேந்திரன் —