மனக்கடல்
நீலக் கடல்
நானெனும் மனம்
அன்பான மனம்
ஆழமான கடல்
ஓயாத மனதின்
எண்ணங்கள் நீளும்
ஓயாத கடலின்
அலைகளும் நீளும்
இயற்கை சீற்றத்தில் ஆர்பரிக்கும் கடலலை
இடரில் ஆட்டுவிக்கும்
மனதின் அலை
கடலின் ஆழம்
அறியா ஆழ்கடல்
அன்பின் ஆழம்
அறியா ஆழ்மனம்
பாதம் தொட்டுத்
திரும்பும் அலைகள்
எண்ணம் தொட்டுத்
திரும்பும் அறிவு
கூடி கடலில்
சங்கமிக்கும் நதிகள்
கூடிய மனதில்
சங்கமிக்கும் நினைவுகள்
கண்களறியும் கடலும்
காணமுடியா மனமும்
மறைக்கப் பட்ட
மர்மங்களின் குகை
பத்மாவதி