ஒரு கனா கண்டேன்
அந்தி மாலை பொழுது
செங்கதிரவன் நிறம் பட்டு வானம் சிவக்க…
பறவைகள்… கூட்டம் கூட்டமாக அங்குமிங்கும் கவிபாடி வானில் பறக்க…
ஒரு ஒளிக்கீற்றுடன் வந்த தேவதை என் கரம் பிடித்து அழைக்க…
நானும் என்னை இழக்க..
வானில் பறந்து கண்ணாடி மாளிகையில் தரையிறங்க…
சங்கத் தமிழ் வளர்த்தெடுத்த முத்தமிழ் கன்னியவள்..
செந்தமிழ் சொல்லெடுத்து…
தூய தேன் தமிழில்
அவள் செவ்விதழ் பாட….
நம் கைகள் இரண்டும் சுதி சேர…
கால்கள் நான்கும் தாளமிட….
ஒரு காவியம் அரங்கேற..
அன்பின் அதிர்வாக !
அகிலத்தின் பிடிப்பாக !
ஆசையின் துடிப்பாக !
நேசத்தின் நெருக்கமாக !
பாசத்தின் பிணைப்பாக கைகள் சேர….
உள்ளத்தின் உருக்கம்
உடலின் சிலிர்ப்பு
உயிரில் உறைய
ஒரு காவிய நடனம் அரங்கேறியது….
விழுந்த ஞாயிற்றில்
நடத்தவையெல்லாம் கற்பனை காவியம் என
எழுந்த ஞாயிறு தட்டியெழுப்பி தெளிய வைத்து சிரித்தது …..
— இரா. மகேந்திரன்–
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)