எட்டி நின்று இதுவரைஉன்னோடு முட்டிக் கொண்டது போதுமடா என் முரட்டுக்காளையே… இனி கட்டிக் கொண்டுஉன்னை கட்டி வைக்ககாதலெனும்கயிற்றைஉரிமையாய்உன் கைகளால்என் கழுத்தில்கட்டி விடு……
ஆகஸ்ட்
காட்டில் இருந்தாய்கூட்டமாய்…வேட்டை மனிதன்கூட்டைக் கலைத்தான்..வீரமாய் சிரித்தான்வீழ்ந்தாய் மரித்து.. ஆணவத்தின் வீரஅடையாளமாய்அங்கம் நீக்கிமுகம் வைத்தான்… இருட்டில் இருந்தாலும்பொன்வண்ணம்கொண்டு –கூர்பார்வையால்பயம் காட்டுவாய். S. முத்துக்குமார்
எருது பூட்டிஏர்உழுதே கருதறுத்துகழனி கண்டோம் எருதுமில்லை ஏருமில்லை கருதரு(த்த)க்க கழனியில்லை கழனியெல்லாம் கட்டிடமாய் விளைநிலங்கள் விலைநிலமாய் காளைக்கிங்கே வேலையில்லை காத்திடவும் யாருமில்லை…
மானுடத்தின்வலிமைக்கு உருவகமாகிப்போனஉருவம்.. களத்தில்ஒத்தைக்கு ஒத்தையாய்ஒண்டியாய் நிற்றலும்விளையாட்டெனத்தெரியாமல்களமிறங்கும்காளைகளுடன்ஆம்மனிதக் கட்டிளங் காளைகளுடன்… உதிரம் சிந்திஉயிரைத் துச்சமென நினையாதுவீரத்துடன்ஆர்ப்பரிக்கும்வீரனைகண்ணிமைக்கும் நேரத்திற்கெல்லாம்தட்டிக் கழித்துமிரட்டிச் செல்லும்சாதுர்யம்உனைப் போல்யாருக்குண்டு… தமிழனின்பாரம்பரியத்தின்அடையாளமாகிப்போனஅர்த்தமுள்ளசொந்தம்…
தமிழவர் தன்மையாம்வீரமும் ஈரமும் தகவதை கொணடதாம்வீறுமிகு காளையும் கரமதில் காளையைகவ்விய காளையர் தரமது தகவுடைதன்னிகரிலா வீரனாம் கழனியது விளைந்திடகாளையது உழைத்திடுமே உழவனது…
