எழுத்தாளர்: சு.தமிழ்ச்செல்வன் காலில் முள் குத்தக்கூடாது என செருப்பு போட்ட காலம்போய் கட்டழகை மிகைப்படுத்தும் ஆபரணமாக மாறிவிட்டது செருப்பு, ஹீல்ஸ் செருப்புகளை…
june competition
எழுத்தாளர்: கோபாலகிருஷ்ணன் பால்ராஜ் முதுமையில் தள்ளாடி சுகவீனமாக இருக்கும் கோணமண்ட பெரியமாயனை ஒருவழியாக பெரியாஸ்பத்திரி அழைத்துச்சென்றால் தங்கம்மா. குழந்தை பேறற்ற இருவருக்கும், ஒருவருக்கொருவர் மட்டுமே துணை. கடைசியாக அந்த ஒரு துணையும் இப்போது இல்லை, பெரியமாயன் இறந்துவிட்டார். தங்கம்மாளின் ஒரே கனவு, அடிமை இந்தியாவில் பிறந்து ஐந்துவரை படித்து சில ஆங்கிலச் சொற்களை அப்போதே பேசி மரியாதோடு வாழ்ந்த தன் கணவனை நல்லடக்கம் செய்வது மட்டுமே. சுருக்குப்பையில் இருக்கும் காசு அம்பாசடர் கார் வாடகைக்கு எடுக்கப்போதுமானதாக இருந்தது. பெரியாஸ்பத்திரி வாசலில் இருந்து நள்ளிரவு ரெண்டு மணிக்குக் கார் கிளம்பியது, திக்கற்று நின்ற தங்கமா “கேசம்பட்டி போணும்” என்பதை தவிர வேறொன்றும் சொல்லத்தெரியவில்லை. சூழல் புரிந்த ஓட்டுநர் இரவில் கண்ணில் பட்டவர்களையெல்லாம் கேட்டு பல பல மைல்கள் கடந்து கேசம்பட்டி தெருவில் வண்டியை நிறுத்தினார், பெரியமாயன் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டார். ஏழை கிழவியின் வாழ்வை அர்த்தப்படுத்தி, மகிழ்வித்த உன் பெயர் “மகிழுந்துதானே!!” முற்றும். 10 வரி கதை போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுங்கள்! மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
