நிலாவில் வைத்த சிகப்பு சூரியன் குங்குமம் உன் நெற்றியில்… கங்காதரன்
whats app group
முத்தமிடும் போது களைந்து விடுகிறது குங்குமம்… உன் நெற்றிச் சுவையை கொஞ்சமேனும் சுகித்துவிட்டது என் உதடுகள்… கங்காதரன்
நெற்றியில் நீ இடும் குங்குமமாக இருக்கலாம்.. என்னதான் நினைக்கிறாய் என அறிவதற்காக… கங்காதரன்
உன் கை பட்டு மேலும் சிவந்தது குங்குமம்… கங்காதரன்
உதடுகளை தேடி வந்து உன் நெற்றியில் முத்தமிட்டேன்… உனக்கென்ன உதடுகளை வைத்து வண்டுகளை ஏமாற்றினாய் அதைப் போல் இப்போது நானும்… கங்காதரன்
நெற்றி வகிட்டில் இருந்து விடுபட மறுத்து அழுதழுது சிவக்கிறது குங்குமம்… கங்காதரன்
கைம்பெண் கைகள் படா கோவத்தில் சிவந்து இருக்கிறது குங்குமம்… கங்காதரன்
திமிறி வந்த வெட்கச் சிகப்பை நெற்றியில் சுமக்கிறாய் குங்குமம் என… கங்காதரன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பிறை நெற்றியின் ராணி!!
by admin 2by admin 2மங்களப் பொருள்நெற்றியில் மின்னசுற்றங்கள் வாழ்த்தவண்ணமாக நீபிறை நெற்றியில்ராணியாய் ஜொலிக்கிறாய்பேணிப் பாதுகாக்கஇறை அருள் நாடுவோம் இல்லத்திற்கு வந்தகள்ளமில்லா மங்கையர்களுக்கு கொடுக்க உதவும்தத்து பிள்ளை…
குங்குமம்சுபத்தின் அடையாளம்அவள் நெற்றியில் இட்ட குங்குமம்ஏனோஅவளை மஹாலக்ஷ்மியாய்பிரதிபலித்ததுஎத்தனை நவீனங்கள் வந்தாலும்பண்பாடும்-கலாச்சாரமும்பின்பற்றும் சமூகம்ஒருபோதும்அறத்தை தவறுவதில்லை!குங்குமம்பண்பாட்டின் அடையாளம்! -லி.நௌஷாத் கான்-
