சிறுகுடல் என்பது நம் உடலில் உணவு செரிமானமாகி, ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படும் முக்கிய இடம்.
அதாவது, உணவில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவற்றை நம் உடலால் பயன்படுத்தக்கூடிய வடிவமாக மாற்றி எடுத்துக்கொள்ளும் செயல் சிறுகுடலில் நடைபெறும்.
இது இரைப்பைக்கும் பெருங்குடலுக்கும் இடையில் அமைந்துள்ளது.
இது முன் சிறுகுடல், நடுச்சிறுகுடல், பின்சிறுகுடல் என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
சிறுகுடலின் உட்புறத்தில் வில்லிகள் எனப்படும் நுண்ணிய நீட்சிகள் நிறைந்துள்ளன.
அது பார்க்க விரல்கள் போன்ற அமைப்பை கொண்டிருக்கும்.
இந்த வில்லிகள் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, இரத்த நாளங்களுக்கு அனுப்புகின்றன.
அகம் புறம் : சிறுகுடல் பற்றி அறிவோம்!
previous post