அறுசுவை அட்டில் : பூண்டு சூப்

by Admin 4
3 views

🔶பூண்டு சூப்

தேவையானவை:

♦️பொடியாக நறுக்கிய பூண்டு – 8 டேபிள்ஸ்பூன்  

♦️மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்  

♦️சோள மாவு (கார்ன் ஃப்ளார்) – ஒரு டேபிள்ஸ்பூன்  

♦️கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்  

♦️நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்  

♦️வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்  

♦️உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

💠சோள மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும்.

💠வாணலியில் வெண்ணெய்விட்டு உருக்கி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

💠அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

💠முக்கால் பதம் வெந்ததும் கேரட் துருவல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.

💠பிறகு, சோள மாவு கரைசல் சேர்த்து ஒரு கொதிவிடவும்.

💠மேலே மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

💠பூண்டு சூப் ரெடி.

💠வாரம் மூன்று முறை இந்தப் பூண்டு சூப்பை அருந்தலாம்.

🔵குறிப்பு:

✴️பூண்டு கொலஸ்ட்ராலைக் குறைப்பதுடன் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதையும் தடுக்கிறது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!