ஈஸி டின்னர்

by Nirmal
169 views

தேவையான பொருட்கள்

  • பாஸ்தா நூடுல்ஸ் விருப்பமானது – 1 பாக்கெட் 
  • இறால்கள் – பத்து 
  • ஷெல்கள் – பத்து 
  • பச்சை பெல் பேப்பர்ஸ் – 1 (சிறியதாய் வெட்டிக் கொள்ளவும்)
  • சிவப்பு மிளகாய் – 1 (மீடியம் அளவில் வெட்டிக் கொள்ளவும்)
  • மஞ்சள் முள்ளங்கி – 1/2 (பொடிசாக கீற்றை போல் சீவிக் கொள்ளவும்) 
  • செர்ரி தக்காளிகள் – ஐந்து (ஒவ்வொன்றையும் இரண்டாய் வெட்டிக் கொள்ளவும்) 
  • பூண்டு – 3 பல் (பொடிசாக நறுக்கிக் கொள்ளவும்)
  • பாஸ்தா சோர்ஸ் – விருப்பமான சோர்ஸ் 1 கேன் 
  • இறைச்சி – 1 சிறிய பௌல் (சின்னதாய் துண்டு போட்டுக் கொள்ளவும்)
  • கறிவேப்பிலை – 1 கொத்து
  • சிக்கன் ஸ்டோக் – 1 கியூப் 
  • துளசி – தேவையான அளவு (பொடிசாக வெட்டிக் கொள்ளவும்)
  • அரைத்த கருப்பு மிளகு – தேவையான அளவு 
  • மோசரெல்லா சீஸ் – தேவையான அளவு 
  • உப்பு – தேவையான அளவு 
  • தண்ணீர் – தேவையான அளவு
Pasta spaghetti sample picture 1

செய்முறை 

முதலில் இறால்கள், ஷெல்கள், மற்றும் சதைக்கொண்ட விருப்பமான இறைச்சியினை நன்றாக சுத்தம் செய்திட வேண்டும்.

தொடர்ந்து, அவைகளை நன்றாக வேக வைத்து பின்னர் தனியே எடுத்து வைத்திட வேண்டும்.

பாஸ்தா நூடுல்ஸை ஒரு பெரிய பானையில் கொட்டிட வேண்டும்.

அதில், வேக வைத்த உணவுகளை ஒரு ஓரமாய் கொட்டிட வேண்டும்.

பின்னர், மஞ்சள் முள்ளங்கி, மிளகாய், பூண்டு, செர்ரி தக்காளிகள் மற்றும் பெல் பெப்பர் அனைத்தும் அதே பௌலில் தனித்தனி மூலையில் நிரப்பிட வேண்டும்.

பிறகு, சுவை சேர்த்திட உப்பு, சிக்கன் ஸ்டாக் கியூப் மற்றும் கருப்பு மிளகு தூளை அதில் சேர்த்திட வேண்டும்.

இறுதியாக, இரண்டு கரண்டி சமையல் எண்ணை, விருப்பமான பாஸ்தா சோர்ஸ்சையும் பௌலில் நிரப்பி வேண்டிய அளவு நீரை ஊற்றிட வேண்டும்.

மறந்திடாமல் வாசத்திற்கான கறிவேப்பிலை மற்றும் பொடிதாக நறுக்கிய துளசியையும் சேர்த்திட வேண்டும். 

பிறகு, அடுப்பை தட்டி மூடி போட்டு நன்றாக பாஸ்தா நூடுல்ஸை கொதிக்க விட வேண்டும்.

ஏறக்குறைய, 5 நிமிடங்கள் கடக்க பாஸ்தாவை நன்றாக கிளறி விட வேண்டும்.

அடுத்த 10 நிமிடத்தில் பாஸ்தா நூடுல்ஸின் மீது மோசரெல்லா சீஸ்ஸை தேவையான அளவில் தூவி நிரப்பிட வேண்டும்.

முழுமையாக 12 நிமிடங்கள் கடக்க ஈஸியான டின்னர் பாஸ்தா நூடுல்ஸ் ரெடி.

You may also like

Leave a Comment

error: Content is protected !!