ஒரு நாள் போட்டி கதை: கொலை கொலையா செய்வேன்

by admin 2
96 views

எழுதியவர்: ஜெ.எம்.ஜி.ராஜவேல்

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் தொடர் கொலைகாரனோடு!

அந்த டார்க் ஊதா நிற கோட் அவனுக்கு கச்சிதமாக பொருந்தியது. அது மார்கழி மாதம்,குளிர் மட்டுமல்ல, காற்றும் சேர்ந்து,குளிர் காற்று பலமாக வீசியது.23 ம் மாடித் தண்ணீர் தொட்டியின் கீழே மல்லாக்க படுத்திருந்த தினேஷ்க்கு, தான் அணிந்த கோட் குளிர்க்கு இதமாக இருந்தது.                        

அன்று டிசம்பர் 31, மணி 12.’ஹாப்பி நியூ இயர்’ சத்தம் விண்ணை பிளந்தது. வாண வேடிக்கைகள் விண்ணில் சுமார் அரை மணி நேரமாக மின்னியபடியே இருந்தது.பிறகு ஒரே சத்தம், ஓவென்று பலத்த கூச்சல்,சுமார் நான்கு மணி நேரமாக.

லிப்ட் சரியாக 20ம் தளத்தில் நின்றிருந்தது.லிப்டில் உள்ளே சென்ற தினேஷ் ,15ம் நம்பரை அழுத்தினான்.லிப்ட் விரைவாக கீழே இறங்கியது.        19             18           17       16              15 ம் தளத்தில் நின்றது.லிப்ட்டை விட்டு வெளியேறிய தினேஷ்,நேராக 1509 ம் நம்பர் பிளாட் முன் நின்று,காலிங் பெல்லை அமுக்கினான்.          

‘யாரது’என்ற ஒரு கரகரத்த குரல் ஸ்பீக்கர் வழியாக கேட்டது.                       

 ‘நான்தான் சார் தினேஷ்’ .                      

லேப்டாப்பில் தினேஷை பார்த்த எக்ஸ் மினிஸ்டர் ராஜதுரை ஒரு ரிமோட்டை எடுத்து டோரை ஓப்பன் செய்து,’வாங்க தினேஷ்’ என்று அழைத்தார்.சோபாவில் சாய்ந்திருந்த எக்ஸை குழப்பத்துடன் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தான்.            

அவன் குழப்பத்தைப் பார்த்த ராஜதுரை ‘ஓ என்ன பார்க்கறீங்க,அது ரிமோட் கண்ரோல் ஆட்டோ டோர்’ என்றார். (தினேஷ் மனதில்’நான் பார்க்காததா’)

‘என்ன சாப்டுரீங்க ,பிராந்தியா,விஸ்கியா’ என்று கேட்டார் எக்ஸ்.’

இல்லை சார் ஒன்றும் வேண்டாம் கூலிங்கா பீர் இருக்குமா’.

‘என்ன இப்படி கேட்டுட்டீங்க,இங்க இல்லாத சரக்கே இல்லை,பெரிய பார்ரே இருக்கு’.

‘அதோ அந்த பிரிட்ஜ்ல அதிக கூலீங்காகவே இருக்கு,போயி எடுத்துக்குங்க’.

ஒரு டின் பீர்ரைக் எடுத்து ஓப்பன் பண்ணி ஒரு மடக்கு குடித்தான்.தொண்டைக்கு வெகு இதமாக இருக்க,இருக்க, முழு டின்னையும் ஓரே மூச்சில் குடித்தான்.

‘அடேங்கப்பா,என்னா வேகம்’ என்றார் எக்ஸ்.

‘சாரி சார் ஓரே தாகம்’.

‘சரி ,சரி மேட்டருக்கு வருவோமா’.

‘ஆமா சார் இந்த ஐபேட்ல எல்லாம் ஸ்டோர் ஆயிருக்கு,எல்லாம் சூப்பர் ரிச் குடும்ப பெண்கள்’.

ஐபேட்டை  வாங்கி ஒவ்வொரு போட்டாவா பார்த்த எக்ஸ் ‘சூப்பர் சூப்பர்’,என்று சொன்னவர் முகம், சட்டென கருத்து சிவந்தது.

‘யார் நீ,இங்க எங்க வந்த’ என்று மிகுந்த கோபத்துடன் கேட்டார்.

சிரித்துக்கொண்டே தினேஷ்’பராவில்லையே முக்கா போதையிலும் டக்னு கண்டு பிடிச்சுட்டீங்க’ 

‘போன வாரம் நீங்க, அப்புறம் உங்க பிரண்ட், இதே பிளாக்கிலே 1009 ம் குடியிருக்கிற பிரபல தொழிலதிபர் எஸ் வி.எஸ் இரண்டு பேரும், இந்த ரேஷ்மாவை ரேப் பண்ணி,கொலை செஞ்சு உங்க கல் குவாரியலே தூக்கி வீசிட்டீங்க’.

‘ஏண்டா நாதாரி நாய்களா உங்க மகள்களாகவும், பேத்திகளாகவும் பாவிக்க வேண்டிய எத்தனை பேரை…

‘சரி,சரி உனக்கு எவ்வளவு லட்சம் வேணும்,சொல்லு சீக்கிரம்’.

‘அதெல்லாம் வேண்டாம் சாரே,சரியான தண்டனை தரப் போறேன்.எவனும் இனிமேல் இது மாதிரி நினைச்சுக்கூடப் பார்க்க கூடாது.

,உங்க … அறுத்து காக்கா ஊச்.

இரத்த காடாக மாறியது அவரது பேண்ட்.

லிப்ட் 10ம் தளத்தை நோக்கி இறங்கியது

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!