பார், எழுது போட்டிக் கதை: காலத்தின் சுவை

by Nirmal
2 views

“அந்த படத்தை பார்த்ததும் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.

ஒரு கடிகாரம், ஆனால் அது சாதாரண கடிகாரம் இல்லை.

அதன் முகப்பில் சோறும் கூட்டுகளும் இருந்தன.

சிறிய கிண்ணங்களில் அழகாக அமைக்கப்பட்டிருந்தன.

நேரமும் உணவும் இணைந்த ஒரு அற்புதம் அது.

எதிர்கால உலகின் தலைநகரம் காலபுரம்.

அந்த நகரம் மிகவும் அழகானது.

அங்கே எல்லாமே நேரத்தால் இயங்கியது.

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கடிகாரம் இருந்தது.

ஒவ்வொரு தெருவிலும் ஒரு கடிகாரம் இருந்தது.

மனிதர்கள் நேரத்தை மிகவும் மதித்தார்கள்.

நேரம் தான் அங்கே பெரிய செல்வம

நேரம் தான் அங்கே பெரிய மருந்து.

அந்த நகரத்தில் விஞ்ஞானி ராகவன் வாழ்ந்து வந்தார்.

ராகவன் வயது ஐம்பதை தாண்டியிருக்கும்.

அவர் முகத்தில் எப்போதும் சிந்தனை இருக்கும்.

அவர் கண்களில் எப்போதும் ஆர்வம் இருக்கும்.

அவர் ஒரு பெரிய ஆய்வகத்தில் வேலை செய்தார்.

அந்த ஆய்வகம் கடிகாரம் போலவே தான் அமைப்பு இருக்கும் சுவர்கள் எல்லாம் கடிகாரங்கள்.

அதன் கூரை கூட கடிகாரம் போல இருக்கும்.

ராகவன் மனிதர்களின் வாழ்நாளை பற்றி யோசித்தார்.

மனிதர்கள் நேரத்தை வீணாக்குகிறார்கள் என்று நினைத்தார்.

மனிதர்கள் உணவை வீணாக்குகிறார்கள் என்று நினைத்தார்.

இரண்டையும் சேர்த்து ஒரு இயந்திரம் செய்யலாம் என்று நினைத்தார்.

அந்த இயந்திரத்திற்கு பெயர் வைத்தார்.

கால-உணவு இயக்கி என்று பெயர் வைத்தார்.

அந்த இயந்திரம் மிகவும் விசித்திரமானது.

அதன் நடுவில் ஒரு சோற்று உருண்டை இருந்தது.

அந்த உருண்டை நேரத்தை குறிக்கும் மையப்புள்ளி.

அதை சுற்றி பல சிறிய கிண்ணங்கள் இருந்தன.

ஒவ்வொரு கிண்ணத்திலும் ஒரு கூட்டு இருந்தது.

ஒரு கிண்ணத்தில் பருப்பு இருந்தது.

ஒரு கிண்ணத்தில் காய்கறி இருந்தது.

ஒரு கிண்ணத்தில் ரசம் இருந்தது.

ஒரு கிண்ணத்தில் தயிர் இருந்தது.

ஒரு கிண்ணத்தில் ஊறுகாய் இருந்தது.

ஒவ்வொரு கிண்ணமும் ஒரு உணர்வை குறித்தது.

பருப்பு அன்பை குறித்தது.

காய்கறி அமைதியை குறித்தது.

ரசம் கோபத்தை குறித்தது.

தயிர் மகிழ்ச்சியை குறித்தது.

ஊறுகாய் நினைவுகளை குறித்தது.

சோறு வாழ்க்கையை குறித்தது.

இந்த கடிகாரம் வெறும் நேரத்தை காட்டவில்லை.

அது மனிதனின் பசியை அளந்தது.

அது மனிதனின் நினைவுகளை அளந்தது.

அது மனிதனின் ஆயுளை அளந்தது.

ராகவன் இதை பல வருடங்களாக உருவாக்கினார்.

இரவு பகலாக உழைத்தார்.

சாப்பிடாமல் கூட வேலை செய்தார்.

தூங்காமல் கூட வேலை செய்தார்.

அவருக்கு உதவ ஒரு சிறுமி இருந்தாள்.

அவள் பெயர் மீரா.

மீரா வயது பன்னிரண்டு.

அவள் ராகவனின் பேத்தி.

அவள் மிகவும் புத்திசாலி.

அவள் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பாள்.

தாத்தா நேரம் என்றால் என்ன என்று கேட்பாள்.

தாத்தா சாப்பாடு என்றால் என்ன என்று கேட்பாள்.

ராகவன் சிரித்துக் கொண்டே பதில் சொல்வார்.

நேரம் என்பது நாம் வாழும் ஒவ்வொரு நொடி என்பார்.

சாப்பாடு என்பது நாம் வாழ வைக்கும் சுவை என்பார்.

இரண்டும் சேர்ந்தால் தான் வாழ்க்கை என்பார்.

மீரா அதை கேட்டு ஆச்சரியப்படுவாள்.

அவள் அந்த கடிகாரத்தை பார்த்துக் கொண்டே இருப்பாள்.

அந்த கடிகாரத்தின் முட்கள் மெல்ல நகரும்.

ஒவ்வொரு நொடியும் ஒரு சுவையாக மாறும்.

ஒரு நாள் இரவு ஒரு விசித்திரம் நடந்தது.

ராகவன் ஆய்வகத்தில் தனியாக இருந்தார்.

மீரா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாள்.

வெளியே மழை பெய்து கொண்டிருந்தது.

இடி முழங்க.

மின்னல் வெட்ட

திடீரென அந்த இயந்திரத்தின் முட்கள் வேகமாக சுழன்றன.

வழக்கத்திற்கு மாறாக வேகமாக சுழன்றன.

ராகவன் அதிர்ந்து போனார்.

அவர் இயந்திரத்தை நிறுத்த முயன்றார்.

ஆனால் அது நிற்கவில்லை.

அது மேலும் வேகமாக சுழன்றது.

கிண்ணங்கள் ஆட தொடங்கின.

சோற்று உருண்டை சுழல தொடங்கியது.

ஆய்வகம் முழுவதும் வெளிச்சம் பரவியது.

ஒரு விசித்திரமான வாசனை வந்தது.

சாப்பாட்டின் வாசனை.

நேரத்தின் வாசனை.

இரண்டும் சேர்ந்த வாசனை.

ராகவன் கண்களை மூடினார்.

அவருக்கு பழைய நினைவுகள் வந்தன.

சிறு வயதில் அம்மா சமைத்த சாப்பாடு.

அம்மா கையால் போட்ட சோறு.

அப்பா கூட உட்கார்ந்து சாப்பிட்ட நாட்கள்.

நண்பர்களோடு சிரித்து சாப்பிட்ட நாட்கள்.

மனைவியோடு சேர்ந்து சாப்பிட்ட முதல் நாள்.

மகள் பிறந்த அன்று சாப்பிட்ட சாப்பாடு.

எல்லா நினைவுகளும் ஒரே நேரத்தில் வந்தன.

ராகவன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க

இந்த இயந்திரம் நேரத்தை மட்டும் காட்டவில்லை.

இது நினைவுகளையும் காட்டுகிறது என்று உணர்ந்தார்.

இது பசியை மட்டும் காட்டவில்லை.

இது உணர்வுகளையும் காட்டுகிறது என்று உணர்ந்தார்.

அப்போது மீரா ஆய்வகத்திற்கு ஓடி வந்தாள்.

தாத்தா என்ன ஆச்சு என்று கத்தினாள்.

ராகவன் அவளை அணைத்துக் கொண்டார்.

பயப்படாதே கண்ணு என்றார்.

இது தான் நம்ம கண்டுபிடிப்பு என்றார்.

இது தான் காலத்தின் சுவை என்றார்.

மீரா அந்த கடிகாரத்தை பார்த்தாள்.

அவளுக்கும் நினைவுகள் வந்தன.

பள்ளியில் சாப்பிட்ட மதிய உணவு.

தோழிகளோடு பகிர்ந்து சாப்பிட்ட தயிர் சாதம்.

தாத்தா வாங்கி கொடுத்த ஐஸ்கிரீம்.

அம்மா செய்த பாயாசம்.

எல்லாம் அவள் கண் முன் வந்தது.

தாத்தா இது மேஜிக் என்றாள்.

ராகவன் சிரித்தார்.

இது மேஜிக் இல்லை, அறிவியல் என்றார்.

ஆனால் அறிவியலுக்கும் மேல் அன்பு என்றார்.

அந்த இரவு முழுவதும் அந்த இயந்திரம் சுழன்றது.

காலையில் ஊர் முழுவதும் செய்தி பரவியது.

காலபுரத்தில் ஒரு அதிசய கடிகாரம் என்று பரவியது.

எல்லோரும் அதை பார்க்க வந்தார்கள்.

பெரியவர்கள் வந்தார்கள்.

சிறியவர்கள் வந்தார்கள்.

விஞ்ஞானிகள் வந்தார்கள்.

அரசாங்கத்தினர் வந்தார்கள்.

எல்லோரும் அந்த கடிகாரத்தை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.

ஒரு முதியவர் அதை பார்த்து அழுதார்.

என் இளமை நினைவு வருகிறது என்றார்.

ஒரு தாய் அதை பார்த்து சிரித்தார்.

என் குழந்தையின் சிரிப்பு நினைவு வருகிறது என்றார்.

ஒரு சிறுவன் அதை பார்த்து குதித்தான்.

எனக்கு பசிக்கிறது என்றான்.

எல்லோருக்கும் ஒரு உணர்வு வந்தது.

ராகவன் எல்லோருக்கும் விளக்கினார்.

இந்த கடிகாரம் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று சொல்கிறது என்றார்.

ஒவ்வொரு நொடியும் ஒரு சுவை என்றார்.

ஒவ்வொரு வேளை உணவும் ஒரு நினைவு என்றார்.

அதை மதிக்க வேண்டும் என்றார்.

அதை ரசிக்க வேண்டும் என்றார்.

அதை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

மக்கள் அதை கேட்டு அமைதியானார்கள்.

அன்று முதல் காலபுரம் மாறியது.

மக்கள் நேரத்தை மதிக்க தொடங்கினார்கள்.

மக்கள் உணவை மதிக்க தொடங்கினார்கள்.

யாரும் உணவை வீணாக்கவில்லை.

யாரும் நேரத்தை வீணாக்கவில்லை.

ஒவ்வொரு வீட்டிலும் சேர்ந்து சாப்பிட்டார்கள்.

ஒவ்வொரு வீட்டிலும் சேர்ந்து பேசினார்கள்.

ஒவ்வொரு நொடியும் ஒரு கொண்டாட்டமாக மாறியது.

ஆனால் ஒரு ஆபத்தும் இருந்தது.

அந்த கடிகாரத்தின் சமநிலை குலைந்தால் ஆபத்து.

மனிதனின் ஆயுளும் குறையும்.

மனிதனின் உணவும் குறையும்.

பசி அதிகமாகும்.

நினைவுகள் மறையும்.

ராகவன் அதை அறிந்திருந்தார்.

அதனால் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்.

ஒவ்வொரு நாளும் அதன் முட்களை சரிசெய்தார்.

ஒவ்வொரு நாளும் அதன் கிண்ணங்களை சரிசெய்தார்.

மீரா அவருக்கு உதவினாள்.

அவள் தான் இப்போது அவரின் உதவியாளர்.

ஒரு நாள் ஒரு பெரிய சோதனை வந்தது.

ஒரு கருப்பு கும்பல் அந்த கடிகாரத்தை திருட வந்தது.

அவர்கள் அதை வைத்து காலத்தை கட்டுப்படுத்த நினைத்தார்கள்.

அவர்கள் அதை வைத்து உணவை கட்டுப்படுத்த நினைத்தார்கள்.

அவர்கள் இரவில் ஆய்வகத்திற்குள் நுழைந்தார்கள்.

அவர்கள் கடிகாரத்தை தொட்டார்கள்.

அப்போது கடிகாரம் வேகமாக சுழன்றது.

அவர்களுக்கு பசி எடுத்தது.

அவர்களுக்கு பயம் வந்தது.

அவர்களுக்கு பழைய நினைவுகள் வந்தன.

ஒரு திருடனுக்கு அம்மாவின் நினைவு வந்தது.

அவன் அழுதான்.

மற்றொரு திருடனுக்கு குழந்தையின் நினைவு வந்தது.

அவன் திருந்தினான்.

அவர்கள் கடிகாரத்தை விட்டுவிட்டு ஓடினார்கள்.

ராகவன் அவர்களை மன்னித்தார்.

நேரம் எல்லோருக்கும் இரண்டாவது வாய்ப்பு கொடுக்கும் என்றார்.

உணவு எல்லோருக்கும் அன்பை கொடுக்கும் என்றார்.

அந்த கும்பல் திருந்தி நல்லவர்களாக மாறினார்கள்.

அவர்கள் காலபுரத்திலேயே தங்கினார்கள்.

அவர்கள் சமையல்காரர்களாக மாறினார்கள்.

அவர்கள் எல்லோருக்கும் சாப்பாடு போட்டார்கள்.

இது தான் காலத்தின் சுவையின் மகிமை.

காலம் என்பது வெறும் எண் இல்லை.

காலம் என்பது நாம் உண்ணும் ஒவ்வொரு வேளை உணவு.

காலம் என்பது நாம் வாழும் ஒவ்வொரு நொடி.

காலம் என்பது நாம் நேசிக்கும் ஒவ்வொரு நினைவு.

ராகவன் இதை உலகிற்கு சொன்னார்.

உலகம் அதை புரிந்து கொண்டது.

உலகம் காலத்தை மதிக்க தொடங்கியது.

உலகம் உணவை மதிக்க தொடங்கியது.

மீரா இப்போது பெரிய விஞ்ஞானி ஆகிவிட்டாள்.

அவள் தாத்தாவின் கடிகாரத்தை பாதுகாக்கிறாள்.

அந்த கடிகாரம் இன்னும் காலபுரத்தில் இருக்கிறது.

அது இன்னும் சுழன்று கொண்டே இருக்கிறது.

அது இன்னும் சுவையை கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

அது இன்னும் நேரத்தை காட்டிக் கொண்டே இருக்கிறது.

யார் அதை பார்த்தாலும் அவர்களுக்கு பசி வரும்.

யார் அதை பார்த்தாலும் அவர்களுக்கு நினைவு வரும்.

யார் அதை பார்த்தாலும் அவர்கள் சிரிப்பார்கள்.

இது தான் காலத்தின் சுவை.

மீரா அந்த கடிகாரத்தின் அருகில் நின்றாள்.

அவள் கண்களில் தாத்தாவின் நினைவு இருந்தது.

தாத்தா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நினைவு இருந்தது.

நேரத்தை வீணாக்காதே என்று சொன்னார்.

உணவை வீணாக்காதே என்று சொன்னார்.

அன்பை வீணாக்காதே என்று சொன்னார்.

மீரா அதை தன் வாழ்க்கையாக மாற்றினாள்.

அவள் ஒவ்வொரு நாளும் கடிகாரத்தை துடைத்தாள்.

ஒவ்வொரு கிண்ணத்தையும் சுத்தம் செய்தாள்.

சோற்று உருண்டையை அழகாக வைத்தாள்.

கடிகாரம் அவளை பார்த்து சிரிப்பது போல இருந்தது.

ஒரு நாள் ஒரு சிறுவன் அங்கே வந்தான்.

அவன் பசியோடு வந்தான்.

அவன் கண்களில் கண்ணீர் இருந்தது.

எனக்கு சாப்பாடு வேண்டும் என்றான்.

மீரா அவனுக்கு சாப்பாடு கொடுத்தாள்.

அவன் சாப்

பிட்டு சிரித்தான்.

அந்த சிரிப்பில் காலம் இருந்தது.

அந்த சிரிப்பில் சுவை இருந்தது.

அந்த சிரிப்பில் வாழ்க்கை இருந்தது.

மீரா அதை பார்த்து மகிழ்ந்தாள்.

இது தான் தாத்தாவின் கனவு என்றாள்..

முற்றும்.

இப்போட்டியில் கலந்துக்கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!