தக்காளியின் தாவரவியல் பெயர் Solanum lycopersicum. அது Solanaceae குடும்பத்தைச் சேர்ந்தது.
தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது. உலகின் மிகவும் பிரபலமான காய்கறிகளில் ஒன்றாகும்.
அப்பழம்பல்வேறு வடிவங்கள், அளவுகள் மற்றும் நிறங்களில் கிடைக்கும். பொதுவாக சிவப்பு நிறத்தில் இருக்கும்,
ஆனால், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் ஊதா நிறங்களிலும் தக்காளி கிடைக்கப்பெறுகிறது.
தக்காளி தடிமனான தோலுடன், பல விதைகள் கொண்ட சதைப்பகுதி கொண்ட பழமாகும்.
அதில் வைட்டமின் சி, லைகோபீன், பொட்டாசியம் மற்றும் ஃபைபர் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
வைட்டமின்கள் A, B6, E மற்றும் K, கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களும் நிரம்பி இருக்கின்றன.
தக்காளியை நாம் பச்சையாகவும் சாப்பிடலாம், சமைத்தும் சாப்பிடலாம்.
அதை ஜூஸ், ஜாம், ஜெல்லி போன்றவற்றில் கூட பயன்படுத்திடலாம்.
சாலடுகள், சாஸ்கள், சூப்கள் மற்றும் பிற உணவுகளில் கூட இது பயன்படுத்தப்படுகிறது.
அதிலிருக்கும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
அதேபோல், ஃபைபர் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
தக்காளி ஒரு பழம், காய்கறி அல்ல.
தக்காளி பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
தக்காளி உலகின் 2வது அதிகம் பயிரிடப்படும் காய்கறியாகும்.
உலகின் மிகப்பெரிய தக்காளி 3.9 கிலோ எடைக் கொண்டதாகும்.
previous post