ஒருமுறை தவமுனிவரான அகத்தியர் கமண்டலமும் மையுமாக வந்துக் கொண்டிருந்தார்.
அப்போது காக உருவெடுத்து வந்த விநாயகர் அக்கமண்டல நீரை தட்டிவிட்டு ஓடி விட்டார்.காகம் கவிழ்த்த கமண்டல நீர் ஆறாக ஒடியது.
காகம் தட்டியதால் விரிந்து பரந்த நீராக ஒடியது என்பதால் “காவிரி” என்று பெயர் அந்நதிக்கு உண்டானது.
அகத்தியர் தட்டிவிட்ட காகத்தை திரும்பி பார்த்தார்.
அதைக் காணவில்லை.காகம் நின்ற இடத்தில் கொழுகொழு என்று ஒரு சிறுவன் நின்றிருந்தான்.
அவர் தான் கணபதி.செய்த செயலுக்காக முனிவரைப் பார்த்து சிரித்தான்.
கோபமடைந்த அகத்தியர் அச்சிறுவன் தான் கமண்டல நீரைக் கவிழ்த்தவன் என்ற எண்ணத்தில் அவனது தலையில் குட்ட முயன்றார்.
ஆனால, சிறுவன் விநாயகப் பெருமானாக அகத்தியர் முன் நின்றார்.
குட்ட முயன்ற தவறுக்காக வருந்திய அகத்தியர் அப்படியே தன் தலையில் குட்டிக் கொண்டு, மன்னிக்குமாறு வேண்டினார்.
அது முதல் விநாயகருக்கு தோப்புகரணம் இடும் முறை உண்டானது.