பசுமை இலைகளுக்குள்
முகம் மறைத்து
பூக்கும் இதழ்களின்
முகவரிகளில்
முக வரிகளில்
புரட்சியின் வண்ணமாய்
அத்துணை அழகையும்
ஆளுகைக்குள் அடக்கி
கதிரவனின் வருகையில்
கைதாகி
ஒளிந்திருக்கும்
ஒரு விரல் நீட்டி
மகரந்தம் சுமந்து
வலம் வரும்
வசந்தம் நீ!
ஆதி தனபால்
பசுமை இலைகளுக்குள்
முகம் மறைத்து
பூக்கும் இதழ்களின்
முகவரிகளில்
முக வரிகளில்
புரட்சியின் வண்ணமாய்
அத்துணை அழகையும்
ஆளுகைக்குள் அடக்கி
கதிரவனின் வருகையில்
கைதாகி
ஒளிந்திருக்கும்
ஒரு விரல் நீட்டி
மகரந்தம் சுமந்து
வலம் வரும்
வசந்தம் நீ!
ஆதி தனபால்