அன்று வானொலி வீட்டில்
ஒலிப்பதே மகிழ்ச்சி
பணிகளை தடையின்றி
மணியென முடித்தாலும்
செவிகளில் ஒலிக்கும்
விளம்பரமும் பாடலும்
உற்சாகம் கொடுக்கும்
உடன்பிறவா அக்கா
என்றால் அது வானொலிதான்
கருப்பு வெள்ளையிலிருந்து மறுப்பில்லாத வண்ணமாகி
மாறி கண்ணுக்கு விருந்தளிக்கும் தொலைக்காட்சி என்ற
தங்கை வந்தாலும்
என் ஓட்டு…………..
அக்கா வானொலிக்கே.
இன்றும் என்றும்
அறிவுக்களஞ்சியம்
அக்கா வானொலிக்கு
மக்காத வரவேற்புண்டு!
உஷா முத்துராமன்
