அணையாடை
அடிப்பட்டை….
பெண்களின்
அத்தியாவசிய
காலத்தில்
காத்துநிற்கும்
அடிப்பட்டை –இந்த
சானிடரி நாப்கின்.
பெண்களுக்கு
இயற்கை தந்த
நியதிகள்…
பேறு கால
வலிகளுக்கு
முன்னோட்டம்…
பொறுமை பெற
பெரும் பாடம்…
கரு சுமக்க,
குழவி ஏந்த
தியாகத் தாயாக
மாதந்தோறும்
வலியோடு நடத்தும்
வேள்விகள்.
காத்து நிற்கும்
காவலனாய் — இந்த
சிற்றாடை நாப்கின்.
நாப்கின் உதவி போல நாமும்
அரவணைத்து
அவர்களைக்
காக்க வேண்டும்.
S. முத்துக்குமார்
