புத்தம் புதிய பூமியில்
பூத்து குலுங்கிடும் விருட்சத்தின் நடுவே
வேழம் ஒன்று கம்பீரமாக
வத்தகையை ருசிப்பதை கண்ட
அத்தினி ஆசை கொண்டு அருகே செல்ல
களிரோ நாட்டம் இன்றி கடந்தது பூவனம் நோக்கி
தும்பியோ துயர் கொண்டு தன்னை நோக்க
வழுவை வலுவாய் இருந்தும்
ஆனை தான் அழகில்லையோ என்றெண்ணி
ஓங்கலது ஒப்பனை செய்து
அம்பகம் முழுவதும் ஆசையை நயனித்து
பொங்கடி பொற்பாதமதில் வண்ணப் பூச்சுகள் பூசி
கும்பிக்காக காதலுடன் காத்திருந்தது அது வரும் வழியே…
யார் அதற்கு சொல்வார்…?
காதல் ஒப்பனையற்ற நேயத்தின் நேசப்பரிமாற்றமென்று….!
✍️அனுஷாடேவிட்