அன்பு கொண்ட மானுடம்..
வீறு கொண்டு எழும்
அதிகார வர்க்கத்தின்
அடக்கு முறையை எதிர்த்து…
அரிமாவை போலே..!
முயற்சியின் பிடியில்
_கண் அயற்ச்சியில்லாது
உழைக்கும் வர்க்கம்
தன் உழைப்பை திருடும் வர்க்கத்தை எதிர்த்து..
வெகுண்டெழும்
சீற்றமான சிங்கத்தைப் போலே!!
உலகின் மூலை முடுக்குகளில் முடக்கப்படும் எளியோர் என்றாவது
ஒரு நாள்…
கங்குகளாய் வெடித்துச் சிதறுவர்
வலியோரின் வஞ்சனையை எதிர்த்து..!!!
மனம் போன போக்கில் போகாது..
தன் ஆசை துறந்து
தவம் போல் வாழும்
தன்னலமில்லாரின்
சொல்லும் செயலும்
மிளிரும் சிங்கம் போலே!!!
✍🏼 தீபா புருஷோத்தமன்
படம் பார்த்து கவி: அன்பு கொண்ட
previous post