வானத்திற்கும் பூமிக்கும் நடுவே
மகிமையில் மிதக்கும் சீடர்
பருவம் உருகும் மலைகள்
கண் மூடி தவம் செய்கிறது.
அழகு தேகத்தின் கைகளை
குவித்தவாறு வானத்தை அசைக்கிறது.
நிசப்தம் இசையாக,
காற்றின் வீச்சை உள்வாங்க,
அமைதி நிலைத்திருக்கிறது.
இங்கு நேரம் மிதக்கிறது.
இங்கு மனம் மௌனமாகிறது.
இ .டி. ஹேமமாலினி
சமூக ஆர்வலர்
படம் பார்த்து கவி: அமைதி நிலைத்திருக்கிறது
previous post