பாதாம் பருப்பு
அரேபிய பிறப்பு
பாலை நிலத்து உணவு
உன்னை நாநிலமும்
விரும்பி தின்பது வியப்பு
அந்நிய மோகம்
எங்கள் இயல்பு
அதனால் பாதாம் பருப்பு
எங்கள் வீட்டிலிருக்கு
நிலக்கடலை பருப்பு
உன்னைவிட சிறப்பு
இதை உணராமல்
இளம் இந்தியா இருக்கு
மேல் நாட்டு உடை
அரேபிய உணவு
அமெரிக்க வேலை
இதுவே வாழ்வு என்று
வளரும் நாடு
எத்தனை காலம் கடந்தும்
வளர்ந்து கொண்டே இருக்கும்
சர் கணேஷ்