சிறுமி ஒருத்தி, சின்னஞ்சிறு பூக்களுக்கு
ஒளியூட்டும் அன்பை ஊற்றுகிறாள்
குழலிலிருந்து தண்ணீர் இல்லை,
இதயத்திலிருந்து ஒளிக்கதிர்கள்…
அவள் கைகளுக்குள் ஒரு அன்பு உலகம்,
அவள் கால்களுக்குக் கீழே ஒரு கனவுப் பூந்தோட்டம்.
ஒவ்வொரு துளியும் ஒரு அன்பு இதயம்,
ஒவ்வொரு இதயமும் ஒரு புதிய பூ.
வானத்தில் இருந்து நட்சத்திரங்கள் உதிர்ந்து,
மண்ணில் வந்து மலர்களாகின்றன.
சிறுமி அவள் கைகளுக்குள் ஒளித்து வைத்திருக்கும்,
அன்பு பிரபஞ்சம், ஒவ்வொரு துளியிலும் வாழ்கிறது.
இ.டி.ஹேமமாலினி
சமூக ஆர்வலர்
படம் பார்த்து கவி: இதயத்திலிருந்து ஒளிக்கதிர்கள்
previous post
