இந்த புகைப்படம் சொல்லும் வாழ்க்கை தத்துவம் எது வென்று தேடிப் பார்த்தேன்
எவ்வளவு தேடிய போதும் ஒரு மண்ணும் புரியல
சரி யாரிடமாவது உதவி பெறலாம்
என்று பலரிடம் யாசித்தேன்
ஒருவர் இதை
விதையை தரு வாக்கும் திறன் கொண்டது என்றார்
வாழ்வின் கடைசி ஆறடி இது தான் என்றார் ஒருவர்
யாரும் அறியாமல்
குழந்தைகள் புசிக்கும் உணவு என்றார் ஒருவர்
மற்றொருவர் வந்து
இது தான் தேசத்தாய் என்றார்
உணவு தேசம் சொத்து சுகம் எல்லாம் இது வென்றால்
இப்போது எனக்கு குழப்பம் தீர்ந்து
இந்த புகைப்படம் கூறும் தத்துவம்
இனி வாழ்வு என்பது மண்ணாய் போகட்டும் என்று வாழ்த்தி விட்டேன்
கணேஷ்