இன்பத்தின் இனிமையே
ஆஹா… ஆஹா…. ஆஹா…
உனை நினைக்காத
நாளில்லை…
உனை சுவைக்காத
நாவில்லை…
என்னுள்ளே நீ
கரைந்து போனாய்…
உன்னாலே நான்
மகிழ்ந்து போனேன்…
உன் மேனியின் ரகசியம்
என்னவென்று
புரியவில்லை…
உனை பிடிக்காதவர்
எவருமில்லை…
உன் வடிவம்
செவ்வகமோ சதுரமோ,
உடைந்தால் என்ன,
உருகினால் என்ன,
எப்படியும்
உன் உயிர்
கரையபோவது
என் உயிரில் தானே…
குவியலாய் உனை
கண்ட நொடியில்
உன் மேல் காதல் கொண்டு
உன் சுவையில்
உறைந்து போனவள்
நான்தானே…
ஒவ்வொருவரையும்
மகிழ்வில் ஆழ்த்த
எத்தனை மாயங்களை
உன்னுள் மறைத்து வைத்திருக்கிறாய் …
எத்தனை முறை
சுவைத்தாலும்
சலிக்காமல் மகிழ்வில்
மிதக்க வைக்கும்
வித்தையை எங்கு
சென்று கற்றாயோ….
எங்கள் வாழ்வில்
வரமாய் வந்த
இன்பத்தின் இனிமை
நீ தானே ….
என்றென்றும் எங்கள்
இன்பத்தின் துணையும்
நீ தானே….
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.