அழகிய கூடாரத்தில்!
வசதியான இருக்கைகளில்!
குளிருக்கு
இதமூட்டும், சுடரொளி
களியாட்டத்தோடு!
வெள்ளியில் வார்த்த நீரோடை, பொன்னிறமாக
மின்ன! கற்பாறைகளும்,
உச்சி உயர்ந்த மரங்களும் சூழ,
இள மாலைப் பொழுது இனிமையாக கழிய,
வாழ்வில் என்றும் மறவா இனிய நினைவலைகள், நெஞ்சில் நிறைய
தனிமை விரும்பும்
காதலர்களுக்கு இனிய சொர்க்கம் இதுவே…
இப்படிக்கு
சுஜாதா