நிறங்களின் சங்கமம்
மனதை அசைக்கும்
நீரின் அலைகளில்
அமைதி ததும்பும்.
சுடரின் அசைவில்
கண்களின் லயம்
மெழுகின் உருகலில்
காதலின் மயம்.
ஒவ்வொரு தீபமும்
ஒரு புதிய சொல்
இருளின் அமைதியில்
பூக்கும் ஒரு பொன்.
இ.டி. ஹேமமாலினி
சமூக ஆர்வலர்
படம் பார்த்து கவி: இருள் ஆழியில்
ஒளியின் தீபங்கள்!
previous post