- உன் தந்தை *
நீ பிறந்த நொடியில்
பெண் குழந்தை என
பதறிப்போனேன் ,,,!
உன் முகம் கண்டு மெய்
சிலிர்த்து போனேன் ,,,!
நீ தவழும் அழகை கண்டு
பசி மறந்து போனேன் ,,,!
பட்டாடை கட்டி நீ நடந்த
போது உன் நினைவுகளை
பத்திரப்படுத்தினேன் …!!!
உன் நினைவுகளே என்னுள்
நீங்கா சிந்தனையானது ,,,!!!
சந்திரனும் சூரியனும் உனை
வாரியனைத்து முத்தமிட
துடிக்கும் பேரழகி நீ…!!!
உன் அருகில் இருக்கையில்
நான் நானாக இல்லை ;,,,
நீ இல்லாத நேரங்களில்
என் உலகம் நேராக இல்லை ;…!
முதன் முதலாக உன் பாதம்
பட்ட என் கரங்களை
ஓவியமாய் வடித்து விட்டேன்….!
கம்பன் இருந்திருந்தாள்
உனையே காவியமாய்
வடித்திருப்பான் …..!!!
மடியில் சுமக்கவில்லை
என்றாலும் மரணம் வரை
மனதில் சுமந்திடுவேன்
தேவதையே
உன் தந்தையாக ….!!!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.