உன் நெற்றியில் தழுவும்
அந்த ஒற்றை கூந்தல் முடி
நன்கு தீட்டிய
கருப்பு மை பூசிய புருவங்கள்
பேச்சுக்கு நடுவே
அடிக்கடி செல்லமாய்
உதடு சுழிக்கும்
முக பாவணைகள்
உன் தேனிதழில்
தொட்டு ,பட்டு வரம் வாங்கும்
முத்துக்கல் பதித்த
தங்கச் செயின்
நெற்றிக்கு பொருத்தமாய் இட்ட
சின்ன குங்குமப் பொட்டு
உன் காதோரம் ஒட்டி
உறவாடும் அந்த ஜிமிக்கி என்று
இன்னும் இரசித்து
உன்னை காதல் கொள்ள
அன்றும்,இன்றும்,என்றும்
பல தருணங்கள் உள்ளதடி!
வெட்கம் விட்டு சொல்கிறேன்
உன்னை காதல் செய்ய
இந்த ஒரு ஜென்மம் போதாதடி!
-லி.நௌஷாத் கான்-