வீட்டில் மணி பிளான்ட் வளர்க்க காரணம் என்னவோ செல்வம், அமைதியை ஈர்க்கத்தான்..
அதை நான் வளர்க்க காரணம், எதிர் வீட்டில் இருந்து நீ செய்யும்
ஒவ்வொரு அசைவையும்
ரசிக்கத்தனடா….
சிறு தண்டில் ஊற்றிய நீரில் கொடியாய்
படர்ந்து இன்று அழகாய் செழித்து
நிற்பதை காணும் போதெல்லாம்……
உன் சிறு விழி அசைவில் தோன்றிய என் காதலும் படர்ந்து உன் கவனத்தை ஈர்க்கிறதோ என கவலை கொள்ள செய்கிறது…..
கடந்து செல்லாதே கவனித்து செல்…
அப்போது தான் நீயும் அறிவாய்
என் விழியில்
உன் விழி ஈர்ப்பு விசையை…..
🩷 லதா கலை 🩷
