ஏரிக்கரையிலே இருவரும் ஒன்றாக
வண்டிக்கும் வலித்து விட கூடாதென்று
மெதுவாக மிதித்து சுற்றிய பொழுது
அந்தி சூரியன் மரங்களுக்குள் மறைய,
கூடையில் இருந்த மலர்களின் வாசம்
நம்மை சூழ்ந்து சொர்க்கமோ என்று தோன்ற,
உந்தன் ஒவ்வொரு மௌன பார்வையும்
செவ்வானத்தின் நிறத்தை எனக்குள் தோற்றுவிக்க,
இணைந்த கரங்களுடன் என்றும் மறவாத இனிமையான பயணம்…
- அருள்மொழி மணவாளன்.