ஒரு நேர்கொண்ட பார்வையால்…
என் விழி உன்னை நோக்க….
உன் விழி என்னை
நோக்க….
உன் பார்வை அம்புகள்
ஊடுருவி
என் இதயம் தாக்க…
மதி மயங்கி காதல் கொண்டேனடி….
ஒரு கனம்.
மறு கனம்,
ஆகாய மெண்மதியும்
உன்னை கண்டு
நாணம் கொண்டு
முகில் கூட்டங்களுக்கிடையில்
மறைந்ததடி….
நிலவொளியால் கர்வம் கொண்ட செங்கதிரவன் கூட உன் முக பிரகாசம் கண்டு மெய்யாய்வு
செய்யுதடி….
உன்னை கண்டால்
சீதையின் மறு பிறவிவோ .. என கம்பன் கூட கவி பாடுவானடி…
எட்டாக் கனியென தெரிந்தும்….
உன் அம்பு விழியால் காயம் கொண்ட இதயம்…
உன் அன்பு வலையால் சிக்கி விடதோ என இதயம் ஏங்குதடி…
உன் மேல் கொண்ட காதல் மோகத்தால்
மேகமாய் பின் தொடரும் கனவுலக கவிபித்தன் ஆனதும்
ஏனடி…..
—- இரா. மகேந்திரன்—-