ஆருயிர்
காதலனே…
கசப்பான பாகற்காயை
ஒதுக்கி வைப்பது போல்,
உன்னை மட்டுமே
எண்ணி உருகும்
என் காதலையும்
கசப்பாய் ஒதுக்கி விட்டு
செல்கிறாய்….
ஆனால் நீ அறிவாயோ???
உண்டால் மட்டுமே பாகற்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உன் உடலை வலுப்படுத்தும்…
அது போல்
என் காதலையும் நீ உணர்ந்தால் மட்டுமே
கசந்த என் காதலும் உனக்கு இனிக்கும்….
🩷 லதா கலை 🩷
