வண்ண வண்ண நிறங்கள்
வித விதமான வடிவங்கள்
தரத்திற்கு ஏற்ப
தகுதிக்கு ஏற்ப
என பலவகை
நீர்க் குடுவைகள்
இருந்தாலும் உள்ளிருப்பது
நீர் மட்டுமே
அதைப் போல
கருப்பு வெள்ளை புதுநிறம்
மெலிந்த நலிந்த குண்டு
உயரம் நடுத்தரம் குள்ளம்
என பலவகையில்
பெண்கள் இருந்தாலும்
உள்ளமும் உணர்வும்
உன்னைப் போலேதான்
என எதிர்கால
ஆண் சந்ததிகளுக்கு
சொல்லி வளர்ப்பது
பெற்றோராகிய நமது கடமை
பத்மாவதி
