மழையில் நனைந்த குழந்தை
தண்ணீரில் நின்றபடியே
கவலையுடன் பார்க்க,
ஒரு பொம்மை கரடி
மஞ்சள் நிற மலரொன்றை
கையசைத்து நீட்டுகிறது!
குளத்தில் இருந்த நீர்,
குழந்தையின் சோகத்தை
பிரித்து எடுத்து,
கரடியின் அன்பை
கண்ணில் காண்பிக்கிறது!
மஞ்சள் மலரின்
வசீகரம் அதை உணர்த்துகிறது!
குழந்தையின் சிரிப்பு
மழையுடன் சேர்ந்து
குளத்தில் கலக்கிறது!
அன்பு என்ற பூவை
பறிக்க,
கடவுளும், இயற்கையும்
உதவி செய்கிறது!
இ.டி.ஹேமமாலினி .
சமூக ஆர்வலர்
படம் பார்த்து கவி: கடவுளும், இயற்கையும்!
previous post
