கடும் உழைப்பில்
இடம் வாங்கி
உயிர் உழைப்பில்
கடன் வாங்கி
மனம் மகிழ
மாடிவீடு கட்டினேன்.
வாங்கிய கடன்
வட்டிக்கு குட்டிபோட
மாடிவீடு அவனிடம்
மாட்டி விட்டது.
சாவிகள் மட்டும்
என்னிடம்
சிக்கி விட்டது.
மீண்டும்
வாடகை வீடு
வந்து சேர்ந்தேன்.
கடன் வாங்காது
வீடு கட்டும்
பாடத்தோடு.
செ.ம.சுபாஷினி