கண்ணாடிக்குவளைக்குள் கவின்மிகு சுடரே!
உன்னைக்கண்டதும் நினைவில் என் அன்னையே!
அனலிடைமெழுகாய்த் தினம் தினம் உருகினாளே!
கண்ணனின் புல்லாங்குழல் கூட ஓய்வெடுக்கும்!
அன்னையின் ஓமக்குழலுக்கு ஓய்வேது?
எரிவாயு இல்லாக் காலமது, வாயுபகவானின் துணை மட்டுமே!
உன் கூட்டைக் காப்பாற்ற நீ வெறுங்கூடாய்ப்போனாயே தாயே!
சுடர் போகும் திசை நாமும் அறியோமே!
தாயே உன் உயிர் சென்ற இடமெங்கே அறியேனே!
வேரைத்தொலைத்து விட்டு விழுதுமட்டும் நிற்கின்றேன் என் மரத்துப் பறவைகளோடு!
இன்று என்மரத்தில் ஆயிரம் இலைகள் உறவாக,நட்பாக,,,,,ஆனால் நீவிட்டுச்சென்ற இடம் மட்டும் என்றென்றும் வெற்றிடமே!
மு.லதா