காற்று வெளியிடை கண்ணம்மா.. என்று காணி நிலத்தில் ஊஞ்சல் ஆடியதெல்லாம் அக்காலம்….
காற்று புகா
காங்க்ரீட் சிறையில் காலம் தள்ளும் எமக்கு என்றும் உற்ற தோழன் நீ….
மின்சார துண்டிப்பில் நீ நின்று விடும் போது ‘சம்சாரமே’ நொந்து தவிக்கும்…
மிடில் கிளாஸ் கண்ணுறங்க,
நீயே சாமரம் வீசி…
மூப்படைந்து தளர்ந்தாலும்.. உன் இறகை குச்சியால் உயிர்பித்தால் குளிர்ந்து தருவாய் குரலோடு காற்றை…
S. முத்துக்குமார்