உருவத்தில் பெரியவன்!
உள்ளத்தில்
சிறியவன்!
காதோடு ரகசியம் பேசி உரையாடுவதில் பரிக்கு நிகரேது? குழந்தையோடு குழந்தையானவனின்
குண்டுமணி கண்ணில் குறும்பு மின்ன,
முறக்காது சாமரம் வீச,
திருவாரூர் தேர் போல்
மத்தள உடலசய,
ஈர்ரிரண்டு தூண்கள் முன்னெடுக்க, ஐந்தாம் கை ஆசீர்வதிக்க, பெருத்த இடையின் பின்னழகில் தமை மறந்தவர்
எத்துணையோர்? உன் வாலில் குறும்பு செய்வோர்க்கு நீயும்
குறும்பாகவே தண்டனை கொடுக்க தெறித்து ஓடும் விடலையர் கூட்டம் எங்கே? எங்கே?
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: குழந்தையான கஜராஜன்
previous post