கொஞ்சம்
சுயநலமாய் வாழ பழகி கொள்
ரொம்ப
நல்லவனாய் இருந்து விட்டால்
சுற்றி இருப்பவனின் சுதந்திரம்-உன்
நெற்றி தொடும் வரை இருக்கும்
கலிகாலம் இது
கறிவேப்பிலையாய் பயன்படுத்தி
குப்பையில் எறிந்து விடுவார்கள்
எல்லோரிடத்திலும்
கொஞ்சம் தூர நின்று பழகு
அளவோடு அன்பு செய்
வளமோடு வாழ்வாய்!
-லி.நௌஷாத் கான்-
